Friday, January 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணிக்கையாக கிடைத்த யானைத் தந்தங்களை விற்க முயன்ற விகாராதிபதி கைது

காணிக்கையாக கிடைத்த யானைத் தந்தங்களை விற்க முயன்ற விகாராதிபதி கைது

பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விகாரையின் விகாராதிபதியை, பாணந்துறை வளன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உதய குமாரவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம் பன்னிரண்டாம் திகதி மாத்தறையில் ஒரு ஜோடி தந்தத்துடன் விற்பனை செய்ய கொள்வனவு செய்பவரை தேடுவதாக, விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல முக்கியத் தகவல்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிடபெத்தர பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் திருவுருவங்களுக்காக இந்த யானைத் தந்தங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, 65 வயதான விகாராதிபதி கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தான் விகாரைக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட இந்த ஜோடி தந்தங்களை சந்தேக நபரான விகாராதிபதி கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Alliance Finance Company PLC

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles