Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்.பிகளுக்கு வழங்கப்படும் வீடுகளின் வாடகை தொகையை அதிகரிக்க முன்மொழிவு

எம்.பிகளுக்கு வழங்கப்படும் வீடுகளின் வாடகை தொகையை அதிகரிக்க முன்மொழிவு

மாதிவெலவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியின் மாதாந்த வாடகைக் கட்டணத்தை 1000 ரூபாவால் அதிகரிப்பதற்கான பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்றக் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது தவிர, குறித்த முன்மொழிவில், தினசரி அபராதத் தொகையை 500 ரூபாவாக உயர்த்துவதும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக இந்த கட்டணங்கள் திருத்தப்படவில்லை.

இந்த வாடகைக் கட்டணங்கள் மற்றும் அபராதங்களை அதிகரிப்பது தொடர்பாக அவ்வப்போது உள்துறைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

இங்கு குடியிருப்பவர்களிடமிருந்து குறைந்த தொகையை வசூலித்தாலும், வீட்டு வளாக பராமரிப்புக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles