அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் உள்ள கடையில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்த அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வெப்பம் காரணமாக, தீ வேகமாக பரவியதாகவும், குறித்த கடையில் ஏற்பட்ட தீ அருகில் உள்ள பல கடைகளுக்கும் பரவியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.