Thursday, August 7, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதி கோரும் அரை சொகுசு பேருந்துகள்

அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதி கோரும் அரை சொகுசு பேருந்துகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அரை சொகுசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்தையில் சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அரை சொகுசு பேருந்துகளை நெடுஞ்சாலைகளில் இயக்க அனுமதிக்க வேண்டும்.

இதன் மூலம் பயணிகளுக்கு தரமான பேருந்து சேவையை வழங்குவதுடன் கொழும்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் நாட்டில் அரை சொகுசு பேருந்து சேவை நீக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles