Saturday, September 20, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60,460 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

60,460 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்த கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, இந்தியாவைச் சேர்ந்த குறித்த நபரின் உடமைகளை சோதனையிட்ட போது, ​​அதிநவீன முறையில் ஹேர் டை பொதிகளில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை மாற்றாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் இருந்து 34 கிலோகிராம் எடையுள்ள 60,460 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரஜவெல்ல – திகன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles