Saturday, September 20, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 11 வயது சிறுவன் பலி

வாகன விபத்தில் 11 வயது சிறுவன் பலி

ஹெட்டிபொல, மூனமல்தெனிய – கட்டுபொத்த வீதியில் அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுபொடயிலிருந்து மூனமல்தெனிய நோக்கிச் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர், பேருந்திலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் சிறிய ரக லொறியில் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

வலவ்வத்தை – அனுக்கன்ஹேன பிரதேசத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles