மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கினை அடைவதற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
சுங்கத்துறையின் வருட வருமான இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு சுங்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும்.
எனினும் பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அந்த இலக்கினை எட்ட முடியாது போனதாகவும் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.