Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோயாளர்களை போதையாக்கி நகைகளை திருடிய இருவர் கைது

நோயாளர்களை போதையாக்கி நகைகளை திருடிய இருவர் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்ற வயோதிபர்கள் மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை போதையில் வைத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர.

சந்தேகநபர்கள் இருவரும் இணைந்து திருடிச் சென்ற சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் வெலிகம பிரதேசத்தில் தங்கம் கொள்வனவு செய்யும் இடமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள விடயத்தையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவுக்கு வரும்முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதுப் பெண்களுடன் நட்பு பாராட்டி, அவர்களை அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்வதோடு, போதை கலந்த உணவு மற்றும் பானங்களை அவர்களுக்கு கலந்து கொடுத்துவிட்டு, இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போதையில் இருக்கும் நோயாளர்களிடம், யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவர்களுக்கு உதவி செய்யும் நபராக காட்சியளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles