Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்சீன வைத்தியசாலை தீப்பரவலில் 29 பேர் பலி

சீன வைத்தியசாலை தீப்பரவலில் 29 பேர் பலி

சீனா – பீஜிங் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் நோயாளர்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைய ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக இந்த அனர்த்தம் கருதப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று பி.ப. 01.00 மணியளவில் சாங்ஃபெங் வைத்தியசாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் உட்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் உள் நோயாளர்கள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின் போது ஏற்பட்ட தீப்பொறிகளினால் இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles