உலகளாவிய ரீதியில் அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா. தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.428 பில்லியனை கடந்துள்ளது.
இது சீனாவின் மக்கள் தொகையை விட (1.425 பில்லியன்) சற்றே அதிகம் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் கூறியுள்ளது.
1950 ஆம் ஆண்டு ஐ.நா மக்கள் தொகை நிதியம் தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தியது இதுவே முதல் முறை.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா தற்சமயம் உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.