Saturday, September 20, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுரங்குகளை பிடிக்கும் செயல் சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பு

குரங்குகளை பிடிக்கும் செயல் சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பு

குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி கிடைத்ததையடுத்து, அவற்றை பிடிக்கும் செயலை சீன நிறுவனத்திற்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

குரங்குகளை பிடித்து விமான நிலையத்துக்குக் கொண்டு செல்ல செலவாகும் பணத்தை வழங்க சீன நிறுவனம் இணங்கிய போதிலும், அவற்றை பிடிப்பது கடினம் என்பதால் அவர்களையே குரங்குகளை பிடிக்குமாறு அறிவுறுத்தியதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்த நாட்டிலுள்ள குரங்குகளை பணத்துக்கு விற்கப்படமாட்டாது என வலியுறுத்திய அமைச்சர், அது தொடர்பில் நிறுவனத்துடன் கலந்துரையாடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குரங்குகளை தமக்கு வழங்குமாறு பல நாடுகளின் உயிரியல் பூங்காக்களில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles