Sunday, September 21, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்தினால் நாட்டின் பிரதம நீதியரசர் அல்ல – மைத்ரிபால

கர்தினால் நாட்டின் பிரதம நீதியரசர் அல்ல – மைத்ரிபால

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கு மட்டுமே உண்டு என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (19) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பின்னர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் வழக்கில் தனக்கு வழங்க உத்தரவிடப்பட்ட தொகையை செலுத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது பத்திரிகையாளர் ஒருவர், ‘தாங்கள் பணம் செலுத்தாவிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கர்தினால் நேற்று கூறியிருந்தார். அதற்கு உங்கள் பதில் என்ன என்று வினவினார்.

இதற்குப் பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, கர்தினால் பிரதம நீதியரசர் அல்ல எனவும், அவை நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படுகின்றன என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles