தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக கமகே தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.
இதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்ற வெளியில் பணிபுரிபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்களில் பல்வேறு பிரதேசங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெளிப்புற விளையாட்டுக்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தர்பூசணி, தோடம்பழ நீர், இளநீர் போன்ற உள்ளூர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவர் குறிப்பிட்டார்.