விடைத்தாள் மதிப்பீட்டுக்கு பல்கலைக்கழக ஆசிரியர்களும் கூடிய விரைவில் இணைவார் என தாம் நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் கூறுகிறார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு 90%க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, 2 மாதங்களுக்கு முன், உதவித்தொகையை உயர்த்தி, கூட்டு உதவித்தொகையை, 2,000 ரூபா வலை உயர்த்தினோம்.
80 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு, 2,900 ரூபாவை வழங்கினோம்.
இதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவுகள் 90%க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.