புத்தாண்டின் போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 145 ஆண்களும் 40 பெண்களும் உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புத்தாண்டின் போது பட்டாசு வெடித்ததால் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டதாகவும், மது அருந்தியதால் 15 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் 44 பேர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், தற்கொலைக்கு முயன்ற இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.