Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போயிருந்த 3 சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்

காணாமல் போயிருந்த 3 சிறுவர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்

வென்னப்புவ பிரதேசத்தில் வீடுகளை விட்டு சென்ற மூன்று சிறார்களும் காலி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் இவ்வாறு காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது சிறுவர்களின் பாட்டி ஒருவர் திட்டிய சம்பவத்தால் மூவரும் வீடுகளை விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் மூவரும் கடந்த 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்று பின்னர் காலி பிரதேசத்தில் தங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த வென்னப்புவ பொலிஸார் நேற்று இந்த மூன்று சிறுவர்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காலிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles