Monday, November 18, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏப்ரலில் 56,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

ஏப்ரலில் 56,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

2023 ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் 56 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஏப்ரல் மாத முதல் இரு வாரங்களில் 56,402 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் (9,554 பேர்) இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து 8,138 பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,185 பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 5,056 பயணிகளும், பிரான்சிலிருந்து 3,487 பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,232 பயணிகளும், சீனாவில் இருந்து 2,085 பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 2,002 பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles