Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை மையப்படுத்தியது!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை மையப்படுத்தியது!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதற்காக பிரபல சட்டத்தரணிகளின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்ட முற்போக்கான மற்றும் மக்களை மையப்படுத்திய சட்டமூலம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளில் நடைமுறையிலுள்ள இதே போன்ற சட்டங்களை கருத்திற்கொண்டு சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள பல அதிகாரங்களையும் இந்த சட்டமூலம் நீக்குவதாக நீதி அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் மக்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், பதவியில் இருக்கும் அல்லது எதிர்காலத்தில் அமையும் அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சர்ச்சைக்குரிய சரத்துக்களையும் விவாதித்து அதற்கேற்ப திருத்தம் செய்ய அரசாங்கம் திறந்திருப்பதாக நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவால் செய்ய அனைத்து பிரிவினருக்கும் அரசாங்கம் மேலதிக அவகாசம் அளித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles