Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளம் ஆசிரியையை வன்புணர்ந்த 60 வயது அதிபர் கைது

இளம் ஆசிரியையை வன்புணர்ந்த 60 வயது அதிபர் கைது

இளம் ஆசிரியை ஒருவரை பாலியல் செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரான 60 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர், 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் நிமித்தம் பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, குறித்த ஆசிரியை நேற்று மதியம் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

அதன்போது, குறித்த ஆசிரியைக்கு அதிபரால் பணியொன்று வழங்கப்பட்டதாகவும், ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், சந்தேகநபரான அதிபரிடம் மினுவாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles