சீனாவுக்கு குரங்குகளை மட்டுமல்லாது மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
புத்தாண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குரங்குகள் பயிர்களை நாசம் செய்வது மட்டுமன்றி மயில்களும் பயிர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துகின்றன.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்ப்பவர்கள் வனாதவில்லு, ஆனமடுவ, அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தோட்டங்களுக்கு இந்த குரங்குகள் மற்றும் மயில்களால் ஏற்படும் சேதங்களையும் விவசாய சமூகம் அனுபவிக்கும் இழப்பையும் காண வேண்டும் என்றார்.