Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் வெளிநாட்டு பெண் பலி

வாகன விபத்தில் வெளிநாட்டு பெண் பலி

கம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் கார் சாரதியும் காயமடைந்த நிலையில், காயமடைந்த இருவரும் கம்பளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டு பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 68 வயதுடைய பிரகாஷ் சரிதா தேவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சாரதியால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி பாறையில் மோதியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles