பதுளை – தல்தென பிரதேசத்திலுள்ள புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 4 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கைதிகள் இன்று (17) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.