கொத்மலை ஓயாவில், திடீரென மீன்கள் இறப்பதாகவும் அந்த மீனை உட்கொள்ள வேண்டாம் என நுவரெலிய மாவட்ட சுகாதார சேவை பணிமனை கோரியுள்ளது.
மீன்கள் இறக்கின்றமைக்கான காரணத்தை ஆய்வு செய்யும் வரை கொத்மலை ஓயாவின் நீரை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஸ்ஸங்க விஜேவர்த்தன அந்த பிரதேச மக்களை கோரியுள்ளார்.
கொத்மலை ஓயாவின் அம்பேவல முதல் மெராயா, எல்ஜின், அக்கரகந்தை வரையான 12 கிலோமீற்றர் நீர் பரப்பளவுக்குள் மீன்கள் உயிரிழந்துள்ளன.
இந்த ஆய்வு பணிகளுக்காக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.