கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயராம வீதிக்கு அருகில் உள்ள குப்பையிலிருந்து இன்று (17) காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்யுமாறு கோனஹேன விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைக்குண்டு குற்றச் செயல்களுக்காக கொண்டு வரப்பட்டதா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கம்பஹா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.