Tuesday, August 19, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்ப்பால் தொண்டையில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் தொண்டையில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் மஸ்கெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்தரை மாத குழந்தையே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது.

இந்த குழந்தைக்கு தாய் பாலூட்டும் போது பால் தொண்டையில் இறுகி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ர்ழஅந குநயவரசநன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles