கடந்த 24 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலையகள் மூலம் 35 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் கூறுகிறார்.
நேற்று (15) காலை 6:00 மணி முதல் இன்று (16) காலை 6:00 மணி வரையான காலப்பகுதியில் இந்த வருமானம் கிடைத்ததாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அந்த காலகட்டத்தில் 126,760 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக வீதிகளில் செலுத்தப்படும் வாகனங்கள் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு வெளிவட்ட வீதியில் அதிகளவான வாகனங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் மேலும் குறிப்பிட்டார்.