Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் நாகப்படுவான் பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது காரைசெலுத்திய அதன் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மன்னார் – முருங்கன் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் தாம் பயணித்த காரிலேயே மன்னார் வைத்தியசாலைக்கு சென்று அங்கிருந்து வைத்தியசாலை தரப்பினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் பயணித்த கார் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles