Thursday, July 31, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா மாயம்?

மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா மாயம்?

இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11) பிற்பகல் சென்றிருந்ததாகவும், பின்னர், மீண்டும் ஒருமுறை சரிபார்த்து வருவதாக கூறி திரும்பிச் சென்றதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும் கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles