Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதுமக்களின் பாதுகாப்புக்காக புலனாய்வு பிரிவினரும் கடமையில்

பொதுமக்களின் பாதுகாப்புக்காக புலனாய்வு பிரிவினரும் கடமையில்

பண்டிகைக் காலத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, காவல்துறைக்கு மேலதிகமாக, புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு சந்தைக்கு போலியான வர்த்தகர்கள் நுழைவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்துடன், போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. அதுகுறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாம் என்பதுடன் பணப்பையை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles