Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் ஆரம்பமான கலந்துரையாடல் நேற்று நள்ளிரவு வரை நீடித்ததாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹெக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம், கடந்த மாதம் 9ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles