Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்புக்கு வரும் ஆண்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும் பெண் கும்பல்

கொழும்புக்கு வரும் ஆண்களின் உடைமைகளை கொள்ளையடிக்கும் பெண் கும்பல்

கொழும்புக்கு செல்லும் ஆண்களை ஆசை காட்டி மயக்கி பாழடைந்த இடத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பொருட்களை கொள்ளையடிக்கும் பெண்கள் குழுவொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெசெல்வத்த பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்ட குழுவே இந்த மோசடியை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிற்கு வரும் ஆண்களை வெறிச்சோடிய கடைகள், இருண்ட சந்துகள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, பாலுறவு கொள்வதற்கு தான் முயற்சி எடுப்பதாகக் காட்டி அவர்களது உடமைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles