Tuesday, March 24, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது

கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே

படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles