இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க அனுமதி பெற்றுள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் எனப்படும் மூன்று நிறுவனங்களுக்கு தற்போது நாட்டில் எண்ணெய் விநியோகம் செய்யும் அதிகாரம் உள்ளது.