Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை – இந்திய படகு சேவை: காங்கேசன்துறை துறைமுக வசதி விரிவாக்கத்தில் கடற்படை

இலங்கை – இந்திய படகு சேவை: காங்கேசன்துறை துறைமுக வசதி விரிவாக்கத்தில் கடற்படை

இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் பாண்டிச்சேரிக்கும் இடையில் மலிவான மற்றும் வசதியான போக்குவரத்து முறையை வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் பயணிகள் படகு சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆதரவாகவும், போக்குவரத்துக்கு இடமளிக்கும் மற்றும் சிந்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் நோக்குடன் இலங்கை கடற்படை காங்கேசன்துறை துறைமுகத்தின் வசதி விரிவாக்கத்தை ஆரம்பித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான கடல் பிராந்தியத்தை வளர்ப்பதற்குக் கடற்படை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரை மற்றும் துறைமுக அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை கடற்படையானது காங்கேசன்துறை துறைமுக வசதிகளை அதன் மனிதவளம் மற்றும் நிபுணத்துவத்தை இயலுமைப்படுத்துவதன் மூலம் விஸ்தரிப்பதற்கு ஆதரவளிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles