மியன்மார் இராணுவம் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 15 பெண்களும் பல குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் சகாய்ன் பிராந்தியத்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் கிராமத்தை இலக்கு வைத்து இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவம் ஆட்சிக்கு வந்த பின்னர் தொடங்கிய மியான்மரின் உள்நாட்டுப் போரின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.