Sunday, October 12, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

மின்சார வேலியில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் தொடர் யானைகள், பன்றிகளின் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தோட்டக் காணி ஒன்றுக்கு மின்சார வேலி போடப்பட்டிருந்தது.

குறித்த வேலிக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவதானிக்காது குறித்த வேலி ஊடாக நேற்று (10) மாலை இளைஞன் ஒருவர் பயணித்துள்ளார்.

இதன்போது யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கனராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பராவார்.

இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles