Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மா விலை மேலும் குறைவடையும்

பால்மா விலை மேலும் குறைவடையும்

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பால்மாக்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படிஇ இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதி ஒன்று 1,120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 3,100 ரூபாவாக நிலவிய ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதமளவில் மேலும் பால்மா பொதிகளின் விலை குறைவடையக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles