பனாமா நாட்டுக்கு சொந்தமான கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நான்கு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.