சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஒளிபரப்பு அதிகார சபையொன்றை ஸ்தாபிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அங்கு ஒளிபரப்பு அதிகாரசபையை அமைப்பதற்கான மசோதாவை சமர்பிப்பதற்கான வரைவுத் தயாரிப்பிற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இது அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.