அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லுயிஸ்வில் நகரில் உள்ள வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட பதில் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் குறித்த வங்கியின் முன்னாள் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.