Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை!

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனில் சைபி இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

GSP + வரி சலுகைகளை வழங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எடுக்க வேண்டிய முடிவிற்கு முன்னதாகவே இந்த புதிய மாற்றுச்சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தை ஏற்காது GSP + ஏற்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் நீடிக்கத் தவறினால், இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகச் சலுகை கிடைக்காமல் போகக்கூடும்.

ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாத அமைப்புகளை அடையாளப்படுத்தும் போது நீதித்துறை மற்றும் மூலம் பொது மக்களது தகவல்களின் அடிப்படையிலான செயல்முறையால் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் இலங்கையில், இந்த செயல்முறை மிகவும் குறைவான வெளிப்படைத் தன்மையை கொண்டுள்ளது என்றும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவர் டெனில் சைபி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles