பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொல்கஹவெலவில் குறித்த கார் பயணித்த போது, பொலிஸார் காரை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
எனினும் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, குறித்த காரில் பயணித்த பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.