Saturday, December 20, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇசைக் கச்சேரியில் மோதல்- நால்வர் மருத்துவமனையில் அனுமதி

இசைக் கச்சேரியில் மோதல்- நால்வர் மருத்துவமனையில் அனுமதி

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்து நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகொல்லாகம நகர பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (09) இரவு இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது, இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதில்ன் காரணமாக இவ்வாறு சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த நால்வரில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரும்பு குழாய் மற்றும் கத்தி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 மற்றும் 47 வயதுடையவர்கள்.

சந்தேகநபர்கள் இன்று (10) மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles