அரசாங்கத்துடன் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் முகமாக, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானமிக்க கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜீத் பிரேமதாச தலைமையிலான இந்த சந்திப்பு, ஏப்ரம் 15ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவுள்ளது.
அந்த கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த பின்னணியில், அரசுடன் இணைந்து கொள்ளும் விடயத்தில் கட்சி மட்டத்தில் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்யும் சஜீத் பிரேமதாசவின் முயற்சி பலனளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.