Monday, December 22, 2025
30 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிராட் கோலியுடன் நடனமாடிய ஷாருக்கான் (Video)

விராட் கோலியுடன் நடனமாடிய ஷாருக்கான் (Video)

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 204 ஓட்டங்களைப் பெற்றது.

205 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியை நடிகர் ஷாருக்கான், அவரது மகள் மற்றும் பாடகர் உஷா உதுப் ஆகியோர் நேரில் சென்று ரசித்தனர்.

இந்தநிலையில், போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான் மைதானத்துக்குள் சென்று கொல்கத்தா அணி வீரர்களை சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெங்களூர் அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோலியையும் ஷாருக்கான் சந்தித்துள்ளார்.

மேலும், விராட் கோலியுடன் ஷாருக்கான் நடனமாடி மகிழ்ந்ததுடன், அவரது கையிலும் முத்தமிட்டுள்ளார்.

இந்தக் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles