நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக நிலக்கரி தாங்கிய 23 கப்பல்கள் வந்துள்ளதாகவும், 23வது கப்பலானது இந்த நாட்களில் நிலக்கரியை இறக்கி வருவதாகவும் மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் டன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்தார்.