Saturday, June 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாத்தா - பாட்டியை கொலை செய்த பேரன் கைது

தாத்தா – பாட்டியை கொலை செய்த பேரன் கைது

பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி பேரன் கொலை செய்துள்ளார்.

கொலை சம்பவத்தினையடுத்து தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியகொல்ல, மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் வைத்து நேற்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்தே பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் குறித்த வனப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர்.

இதன்போதே 22 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles