தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் கொழும்பில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 10ஆம் திகதி முதல் விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தேவையின் அடிப்படையில் பல்வேறு இடங்களுக்கு மேலதிக பேருந்துகள் இயக்கப்படும்.
அரை சொகுசு பேருந்து கட்டணத்தில் விசேட பேருந்துகள் சேவையில் சேர்க்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.