Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணி வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் உயிரிழப்பு

காணி வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் உயிரிழப்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் சிறு முறைப்பாடுகள் பிரிவில் காணி வழக்கு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு செனவிரத்ன பிளேஸில் வசிக்கும் கஜநாயக்க முதலிகே நாலக துஷார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காணி தொடர்பில் உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles