Monday, September 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிகளவில் சோறு சமைத்ததற்காக மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

அதிகளவில் சோறு சமைத்ததற்காக மகளுக்கு தந்தை செய்த கொடூர செயல்

16 வயதுடைய மகளின் முகத்தில் ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் சுட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்த வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தீக்காயங்களுடன் சிறுமி நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அன்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போதுஇ ​​சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, ‘ஏன் இவ்வளவு சோறு சமைக்கிறாய்?’ எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles